திருப்பரங்குன்றம்: பாரம்பர்யபடி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றலாம்; மக்களுக்கு அனுமதி

Spread the love

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி நேற்று (நவம்பர் 28) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

இதன் பிறகு, இனி பாரம்பர்ய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம்.

இது குறித்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தின் அறிக்கை…

“மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக (Receivers) நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதிகள் திரு. எஸ். வைத்தியநாதன் (மேனாள் தலைமை நீதிபதி, மேகாலயா உயர்நீதிமன்றம்) மற்றும் திரு. வி. பார்த்திபன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்) ஆகியோரது நேரடி மேற்பார்வையில்,

அறிக்கை
அறிக்கை

(28.11.2026) அன்று மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

மேலும், பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் 29.11.2026 முதல் 15.12.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் தீபமேற்றி சட்டம்-ஒழுங்கைப் பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *