திருப்பரங்குன்ற தீப விவகாரம்: ’அறங்காவலர் குழு எங்களிடம் ஆலோசிக்கவில்லை’ – ஸ்தானிகர்கள் போர்க்கொடி | Thiruparankundram Deepam issue Temple priests condemns

Spread the love

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாரம்பர்ய வழக்கபடி உச்சிப்பிள்ளையார் கோவிலில்தான் விளக்கேற்றபடும். அதுதான் கோவிலின் பழக்க வழக்கம் மற்றும் ஆகம மரபுகள் என நேற்று திருப்பரங்குன்ற அறங்காவலர் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

“‘இந்தத் தீர்மானத்தின்போது நாங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து எதுவுமே கருத்து சொல்லவில்லை. எங்களைக் கலந்தோசிக்கவில்லை.  இது தங்களுக்கு மன வேதனையை அளித்துள்ளது” என்று கோவிலின் ஸ்தானிகர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து ஸ்தானிகர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “இத்திருக்கோயில் ஸ்தானிகப் பட்டர்கள் எழுதிக் கொண்டது. நேற்று நடந்து முடிந்த 2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஒரு கடிதத்தை நமது திருக்கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம்.

நாங்கள் இத்திருக்கோவிலில் நேற்று நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை என்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால்களை அளித்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்

திருப்பரங்குன்றம் தூண்

திருப்பரங்குன்றம் தூண்

உச்சநீதிமன்ற உத்தரவின் படி மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறோம். மேலும் எங்களை ஆலோசிக்கமால எங்களின் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *