திருமணம் கடந்த உறவு; கண்டித்த மூதாட்டியைக் கொன்ற ஜோடி சிக்கியது எப்படி?கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி | An extramarital affair; how was the couple who killed an elderly woman—after she confronted them—caught?

Spread the love

உடற்கூராய்வு அறிக்கையில் மூதாட்டி முனியம்மாள் மூச்சுத்திணறி இறந்ததாகத் தெரியவர, விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், அவர் வீட்டிற்கு அருகே வசித்து வந்த நாகம்மாள் என்ற பெண்மணி மீது சந்தேகம் ஏற்பட, அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தானும், குண்டா பெருமாள் என்பவரும் சேர்ந்து பெட்ஷீட்டால் முகத்தை அமுக்கி முனியம்மாளைக் கொலை செய்ததாகவும், பின்பு நகையைத் திருடியதாகவும் தெரிவிக்க அதிர்ச்சியடைந்த போலீசார், சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றி நாகம்மாளையும், செம்படமுத்தூரைச் சேர்ந்த குண்டா பெருமாள் என்பவரையும் கைது செய்து திருடிய நகைகளை மீட்டனர்.

Murder (Representational Image)

Murder (Representational Image)

போலீசாரிடம் இருவரும் கொடுத்த வாக்குமூலத்தில், “எங்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகத் திருமணம் கடந்த உறவு இருந்து வந்தது. நாங்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டில் சந்தித்துக்கொள்வதை மூதாட்டி முனியம்மாள் பார்த்துவிட்டார். அதனால் எங்களைத் திட்டிக் கொண்டிருந்தவர், இந்த விஷயத்தை ஊர்க்காரர்களிடம் சொல்லப்போகிறேன் என்று கூறி வந்தார்.

அதோடுதான் அவரைக் கொலை செய்ய திட்டமிட்ட நாங்கள் முனியாம்மாளின் வீட்டுக்குள் சென்று அங்கிருந்த தலையணை, பெட்ஷீட்டால் முகத்தை அமுக்கிக் கொலை செய்தோம். பின்பு அவருடைய தங்கத்தோடு, வெள்ளிக்கொலுசை எடுத்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டோம். யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தோம், இப்போது மாட்டிக்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *