திருமணம் செய்துகொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஸ்வின்; மணப்பெண் யார் பேத்தி தெரியுமா? | ‘Cooku with Comali’ Fame Ashwin Gets Married

Spread the love

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அஸ்வின் குமார்.

இதனைத்தொடர்ந்து கதாநாயகனாக ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தில் நடித்தார்.

தவிர ‘செம்பி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘ஆதித்யா வர்மா’, ‘மீட் க்யூட்’, ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் அஸ்வின் குமார் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அஸ்வின் குமார், புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.

அஸ்வின் - புவனேஸ்வரி திருமணம்

அஸ்வின் – புவனேஸ்வரி திருமணம்

கோவையில் இன்று (நவ.20) உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

“தம்பிக்கு எந்த ஊரு’, ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’, ‘தர்மதுரை’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் ராஜசேகரின் பேத்தி தான் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் – புவனேஸ்வரி ஜோடியின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *