என்னிடம் விசாரணை நடத்தவில்லை. இது உண்மைக்கு புறம்பான செய்தி நான் அது போன்ற எந்த மண்ணும் எடுக்கவோ ஜல்லிக்கற்கள் எடுக்கவில்லை மொத்தத்தில் எனக்கு தெரியாது என கூறி இருக்கிறேன்.
தலைவர் என்னிடம் பேசி என்ன நடக்கிறது என கேட்டார் தலைவரிடம் ஒன்னும் இல்லை தலைவரே உண்மை இல்லை. ஏற்கனவே முறையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒன்னும் பிரச்சனையே இல்லை என கூறினேன்.

இதில் உண்மையே இல்லை. நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் போய் தான் நீதி பெற்றிருக்கிறோம். இதற்கும் நீதிமன்றத்திற்கு செல்வோம் முறையாக சட்டரீதியாக அணுகுவோம்.
குவாரியை பொருத்தமட்டிலும் லீசுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் 2019ல் கொடுத்தோம்
அதை தவிர மற்றது இதில் என்ன நடந்திருக்கிறது என ஒருபோதும் எனக்கு தெரியாது நான் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை” என்றார்.