திருமணம் மீறிய உறவு: கணவர் வெளியிட்ட வீடியோவால் பதைபதைப்பு; ‘மூவரும் நலம்’ – போலீஸ் நிம்மதி | Extramarital affair: Husband posts video of affair; ‘All three are fine’ – police relieved

Spread the love

முகத்தில் காயம் பட்ட மனைவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சையில் இருக்கிறார். மகனுடன் சென்ற தர்மராஜைப் பாதுகாப்பாக மீட்பதற்காக முழு வீச்சில் களம் இறங்கியது போலீஸ். இதில் பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தர்மராஜ் மகனுடன் வல்லம் பகுதியில் இருப்பதை நேற்று இரவு கண்டுபிடித்து கைது செய்தனர்.

இருவரும் நலமாக இருப்பதைப் பார்த்த பின்னர்தான் போலீஸார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். பின்னர் போலீஸார் கைது செய்யப்பட்ட தர்மராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“என் மனைவிதான் சார் எனக்கு உலகம். அவகிட்ட எவ்ளோ சொல்லியும் கேட்கவில்லை. திமிராவே நடந்து கொள்வாள். நமக்கு மகன் இருக்கான், நமக்குனு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு நாம நல்லபடியா வாழ்வோம், நீ தப்பான வழியில் போகாதுனு சொன்னேன். என்னோட உலகமே அவதான்.

அவளோட செயலைத் தாங்க முடியாமல் இப்படி செஞ்சிட்டேன் சார்” என்று போலீஸ்கிட்ட கதறியிருக்கிறார் தர்மராஜ். இப்போது தர்மராஜ் போலீஸ் கட்டுப்பாட்டிலும், அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சையிலும், மகன் உறவினர் வீட்டில் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர்.

மூவரும் நலமாக இருக்கிறார்கள். இது குறித்து தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *