பின்னர், மாரிமுத்துவின் வீட்டில் இருந்து பிருந்தாதேவி வெளியானதாக எந்த பதிவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், மாரிமுத்து, அவரது மனைவி சரவணப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிருந்தாதேவையை கொலை செய்து உடலை காரில் ஏற்றி ஓட்டப்பிடாரத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து சிப்காட் போலீஸார், “பிருந்தாதேவியின் கணவர் குவைத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், பக்கத்து வீட்டு மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்தவீடு என்பதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் வீட்டின் ஒரு அறையில் சரவணப்பிரியா, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில்,மற்றொரு அறையில் பிருந்தாதேவியும் மாரிமுத்துவும் தனிமையில் இருந்துள்ளனர்.

திடீரென கண் விழித்த சரவணப்பியா இதனை பார்த்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன் கணவரை வெளியே தள்ளி அறையின் கதவை பூட்டிய சரவணப்பிரியா, பிருந்தாதேவியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார் சரவணப்பிரியா. பின்னர், மாரிமுத்து மற்றும் தன் தம்பி கார்த்திக்கின் உதவியுடன் பிருந்தாதேவியின் உடலை ஓட்டப்பிடாரம் சிலோன்காலனியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அவரது உடலை குழி தோண்டி புதைத்துள்ளனர். இதில் காருடன் தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகிறோம்” என்றனர்.