திருமா கொடுத்த ட்விஸ்ட்; கட்சி உள்ளடி – செய்யூரில் சோபிக்காத விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!

Spread the love

இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு வழங்கப்பட்ட தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் தொகுதி.

காட்டுமன்னார்கோயிலின் சிட்டிங் எம்.எல்.ஏவான சிந்தனைச் செல்வனுக்கு செய்யூர் கொடுக்கப்பட்ட பின்னணியில் இருப்பது அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

வழக்கத்திற்கு மாறாக, இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் திருமா.

அப்படி போட்டியிட அவர் ‘டிக்’ செய்திருந்த தொகுதி ‘காட்டுமன்னார்கோயில்’. சில பல குழப்பங்கள், அழுத்தங்களால் காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் போட்டியிடவில்லை.

சிந்தனைச் செல்வன்
சிந்தனைச் செல்வன்

ஆனால், ஏற்கெனவே செய்யூர் தொகுதி சிந்தனைச் செல்வனுக்கு ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர் அந்தத் தொகுதியில் நின்றே தேர்தலை சந்தித்தார்.

செய்யூர் தொகுதியைப் பொறுத்தவரை, அது ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி தான். அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ விசிக-வைச் சேர்ந்த பனையூர் பாபு.

தனக்கு சீட் வழங்கப்படாததால், பனையூர் பாபு சிந்தனைச் செல்வனுக்கு ஒத்தழைப்பு வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்தச் சட்டமன்ற தேர்தலில் வீசியுள்ள தவெக அலையும் சிந்தனைச் செல்வனுக்கு கைக்கொடுக்கவில்லை.

இதன் விளைவாக, அதிமுக வேட்பாளர் ராஜசேகர் முதல் இடத்தையும், தவெக வேட்பாளர் மோகன் ராஜா இரண்டாம் இடத்தையும் பெற, சிந்தனைச் செல்வன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *