தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தற்போதைய நிலவரப்படி 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
த.வெ.க தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
தவெகவின் இந்த வெற்றி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” 50 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளது.
இளைஞர்களும், பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர். மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று. பல்வேறு அவதூறுகளைக் கடந்து த.வெ.க வெற்றி பெற்றிருக்கிறது.
75 வருட கட்சிகள் எங்களை எள்ளி நகையாடினார்கள். ஆனால் நாங்கள் அமைதியான முறையில் எங்கள் தலைவர் வழியில் செயல்பட்டோம்.
தலைவரின் பிரச்சாரம் தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த வரலாறு இந்தியாவே எதிர்பார்க்காத ஒரு வரலாறு. இது ஓர் உணர்ச்சிபூர்வமான தருணம்” என்று பேசியிருக்கிறார்.