வாலி சாரோட பேட்டியைக் கேட்டுதான்.!
அந்த நாடகத்துல எனக்குக் கிடைச்ச பாராட்டுகளும், தொடர்ச்சியா நிகழ்ச்சிகள்ல நான் பாடின பாட்டுக்கு கிடைச்ச பாராட்டுகளும், என்னை ஒரு செலிபிரிட்டியா மாத்திருச்சு. ஸ்கூல்ல கிடைச்ச அந்த அங்கீகாரம் தான் என்னைய இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கு.
நான் சின்ன வயசுல ஒரு இயக்குநராகவோ, பாடகராகவோ, குறிப்பா ஒரு ‘பாடலாசிரியராகவோ’ ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். 15, 16 வயசுல நிறைய கவிதைகள் எல்லாம் எழுதி பாக்கெட்டில வச்சிருப்பேன். ஒரு தீவிரமான கவிஞன் மாதிரி எனக்கே ஒரு ஃபீல் இருந்தது.
ஆனா ஒரு நாள், ‘ஆல் இந்தியா’ ரேடியோவுல கவிஞர் வாலி சாரோட பேட்டியைக் கேட்டேன். அதைக் கேட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது, பாடலாசிரியர் ஆகுறது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கு இசையைப் பத்தின அறிவும், வாழ்க்கையைப் பத்தின புரிதலும் வேணும்’னு. ‘அய்யய்யோ இது நமக்கு வராது’ன்னு அன்னையோட அந்த கவிதை டைரியை மூடி பரண்மேல தூக்கிப் போட்டுட்டேன்.

ஸ்கூல் கொடுத்த அங்கீகாரம்!
சரி, நமக்கு வர்றதைச் செய்வோம்’னு நடிப்புக்குள்ள வந்தேன். சினிமாவுக்கு வந்த புதுசுலயும் ஆரம்பத்துல நமக்கு இதுவும் வராதோன்னு தோணுச்சு, அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.
என்னோட முதல் பட இயக்குநர் விஜய் பிரபாகரன் தான் எனக்கு ஒரு நல்ல குருநாதரா இருந்து, ஒரு கதாபாத்திரத்தை எப்படி அணுகணும், எப்படி உள்வாங்கணும்’னு சொல்லிக் கொடுத்தார். இப்படி ஸ்கூல் கொடுத்த அங்கீகாரமும், முறையான வழிகாட்டுதலும் தான் இன்னைக்கு என்னை ஒரு நடிகனா இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு!” என்று பேச்சை முடிக்க போனாவர், கடைசியாக…
“நாங்க எல்லாரும் ஃபேமிலியோட கலந்துக்காம, மாணவர்கள் மட்டும் கலந்துகிட்டோம். அதனால, எங்களுக்கு ஏதோ எங்க பள்ளிகாலத்தை அப்படியே ரி-கிரியேட் பண்ண மாதிரி ஃபீல்” என்று நெகிழ்ச்சியாக பேசி முடித்தார் காளி வெங்கட்.!