தற்போது அறிமுகமாகி உள்ள புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், யார் எந்த ஐ.டி.ஆர் ஃபார்மைப் பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்…
ITR – 1:
சம்பளம், ஓய்வூதியம், இரண்டு வீடுகள் வரையிலான சொத்துகள், வட்டி வருமானம், ரூ.5,000 வரையிலான விவசாய வருமானம் மற்றும் பிரிவு 112A-இன் கீழ் ரூ.1.25 லட்சம் வரையிலான நீண்டகால மூலதன ஆதாயம் (LTCG) ஆகியவற்றுடன், மொத்த வருமானம் ₹50 லட்சம் வரை கொண்ட தனிநபர்கள். இவர்கள் கட்டாயம் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

ITR – 2:
தொழில் அல்லது தொழில் வருமானம் இல்லாத அதிக மூலதன ஆதாயம் (Capital Gains), வெளிநாட்டுச் சொத்துகள், நிறுவனங்களின் இயக்குநர் பதவி அல்லது பட்டியலிடப்படாத பங்குகள் (Unlisted Shares) இருப்போர்.