’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

Spread the love

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டகோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்க விவகாரத்தில், எந்த அரசியல் அழுத்தமும் கிடையாது. 54 பணியாளர்களும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உத்தரவில் என்ன சொல்லி இருக்கிறதோ அது செயல்படுத்தப்படும். அது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. செம்மொழி பூங்கா விவகாரத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக காங்கிரஸ் கூறியது தொடர்பான ஆதாரங்கள் கேட்டு இருக்கின்றோம்,  அது சரியாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும்” என்றார்.

திரையரங்கில் ஜனநாயகன் படத்திற்கு கண்ணீர் விட்டது குறித்த கேள்விக்கு, “எல்லோரும் மனிதர்கள் தான், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை உங்களிடம் தான் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. 30 ஆண்டுகளாக ரசிகர்களாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள், இனிமேல் திரையரங்கில் பார்க்க முடியாது என்ற ஆதங்கத்தில் எங்களை மீறி எமோஷன் வெளிபட்டுவிட்டது. இந்த  விமர்சனங்களில் நானும் இருக்கிறேன். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சித்தோம். இதை அரசியலாக்க வேண்டிய அவசியம் த.வெ.க-விற்கும் இல்லை,  அமைச்சர்களுக்கும் இல்லை. இதை அரசியல் செய்ய தேவையில்லை, மக்கள் பணி செய்து எங்களின் இருப்பை காட்டினால் போதும் என நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.  அம்பேத்கர் சிலை கோவை மாநகரில் இன்னும் வைக்கப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, “இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நல்லதே நடக்கும்” என பதிலளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *