காங்கிரஸ் கட்சி தனது சொந்தத் தோல்விகளுக்கு ‘SIR’-ஐ காரணம் காட்ட விரும்புகிறது. அப்போதைய பிரதமர் நேரு டாக்டர் அம்பேத்கரைத் தனது அமைச்சரவையின் உறுப்பினராக எவ்வாறு நடத்தினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் ஒருபோதும் அவரை நம்பியதில்லை.
எங்கெல்லாம் EVM இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் தோற்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிலும் EVM வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, இமாச்சலப் பிரதேசம் என எல்லா இடங்களிலும் EVM வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்திலும் நடந்தது. அங்கே இந்தக் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது? பூஜ்ஜியம்.

மதம், சாதி, மாநிலம், மொழி ஆகிய எவ்வித பாகுபாடும் இன்றி ஒவ்வொரு மனிதரும் சமம் என்ற உரிமையை நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ளது. அதனால்தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால் இன்று இந்தியாவின் பிரதமராக வர முடிகிறது.
ரயில்வே துறை மேம்பட மாநில அரசும் தனது கடமையைச் செய்ய வேண்டும். ஏனெனில், நிலம் கையகப்படுத்துவது மாநில அரசின் அதிகாரமாகும். நமக்கு சுமார் 4,800 ஹெக்டேர் நிலம் தேவை. ஆனால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலம் வெறும் 1,253 ஹெக்டேர் மட்டுமே. நிலத்தைக் கொடுக்க மாநில அரசு தயாராக இல்லாதபோது, ரயில்வே எவ்வாறு திட்டங்களைக் கட்டமைக்கும்?