மனபயம் விலக்கி காரியஸித்தி அருளும் ஆஞ்சநேயர்… புதுச்சேரிக்கு அருகே பிரமாண்ட பஞ்சமுக அனுமன் கோயில்! | panchavadi anjaneyar temple

Spread the love

அனுமனை வழிபட்டால் நம் துன்பங்கள் உடனே தீரும் என்பது நம்பிக்கை. ராம நாமம் சொல்லித் துதிப்பவர்களை ஓடி வந்து காப்பார் ஆஞ்சநேயர். அதுமட்டுமா, “எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள்புரிவேன்’ என்பது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் வாக்கு. ஆஞ்சநேயர் பாரத தேசம் முழுவதும் பல்வேறு ரூபங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அவற்றுள் மிகவும் சிறப்புவாய்ந்தது பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவம்.

அசுரன் ஒருவனை அழிக்க அனுமன் முகம், நரசிம்ம முகம், கருடமுகம், ஸ்ரீவராக முகம், ஸ்ரீஹயக்ரீவ முகம் என பஞ்சமுகத்துடன் காட்சி தந்தாராம் ஶ்ரீஆஞ்சநேயர். அனுமனின் அந்தத் திருமுகங்கள் ஒவ்வொன்றும் திவ்ய பலன்களை அளிப்பது.

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்

அனுமன் முகம்: கிழக்கு நோக்கியது. பாவங்களைப் போக்கி, தூய சிந்தனையை தரும் இந்தத் திருமுகத்துக்கு வாழைப்பழமும் கடலையும் சமர்ப்பித்து வழிபடவேண்டும்.

நரசிம்ம முகம்: தெற்கு நோக்கியது. சத்ரு பயம் நீக்கி, வெற்றியைத் தரும். இந்த முகத்துக்குப் பானகமும் நீர்மோரும் நைவேத்தியம் செய்வது நலம்.

கருட முகம்: மேற்கு நோக்கியது. தீவினைகளையும் உடலில் உள்ள விஷத்தன்மையையும் அகற்றும். தேன் சமர்ப்பித்து வழிபடு வது சிறப்பு.

ஶ்ரீவராக முகம்: வடக்கு நோக்கியது. கிரகதோஷங்களை நீக்கி, ஐஸ்வரியம் அருளும். இவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத் தியம் செய்து வணங்கவேண்டும்.

ஶ்ரீஹயக்ரீவ முகம்: மேல்நோக்கிய இந்தத் திருமுகம் வாக்கு வன்மை, ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை அருளும். அவல், சர்க்கரை, வெண்ணைய் நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *