தீபாவளி – சிறுகதை | My Vikatan short story about emotional diwali celebration

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

தன் போனை எடுத்து தங்கையை அழைத்தான் குமார்.”ஹலோ,பிரியா எப்படி மா இருக்க??..வீட்டுக்கார், பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?”

“அண்ணா நல்ல இருக்கேன் ணா.. எல்லாரும் நல்லா இருக்காங்க.. அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க??” என்று கேட்டாள் ப்ரியா.

“இருக்கோம் மா..அப்பா இறந்தது அப்புறம் இங்க ஒன்னும் சரி இல்ல மா.. வீடே வெறிச்சோடி இருக்குது..”என்றான் கண்ணீருடன்.

“அழாத னே.. நாங்கலாம் இருக்கோம்ல விற்றுவோமா என்ன”? என்று ஆறுதல் கூறினாள் ப்ரியா.

“சரி மா.. எப்போதும் போல இந்த தீபாவளிக்கும் எல்லாரும் வந்துருங்க..அதுக்கு தான் போன் பண்ணேன்.. இந்நேரம் அப்பா இருந்திருந்தால் ஒரு மாசம் முன்னாடியே போன் போட்டு சொல்லிருப்பார் . என்ன பண்றது.. எல்லாம் இப்டி ஆகிருச்சு..”

“பரவால்ல அண்ணா, நாங்கள் எல்லாரும் வந்துறோம்.. அம்மா எப்படி இருங்காங்க? அம்மாவே நல்ல பாத்துக்கோ” பேசிவிட்டு போனை வைத்தாள்.

குமாரின் அப்பா லிங்கம். அவர்க்கு நாலு பிள்ளைகள். குமார் மூத்தவன்.. பின் பிரியா,கீதா, மற்றும் வாசு. லிங்கம் இறந்து 6 மாதங்கள் தான் ஆகிறது. லிங்கம் கடுமையான உழைப்பாளி. மளிகை கடையில் வேலை பார்த்தே தன் பிள்ளைகளை ஆள் ஆக்கியவர். தன் வாழ்வின் கடைசி வரை உழைக்க தயங்காதவர். குடும்ப சந்தோஷத்தை பெரிதாக மதித்தவர். இரண்டு பெண் குழந்தைகளையும் தன் பார்வையில் இருக்க வேண்டும் என எண்ணி பக்கத்துக்கு ஊரிலேயே மணம் செய்து கொடுத்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *