‘துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி’- பாரதிராஜா மனைவி சந்திர லீலா|The wife of Bharathiraja, Chandraleela, a statement thanking everyone

Spread the love

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பாரதிராஜாவின் மனைவி சந்திர லீலா துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா

மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எனது கணவர் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் ஜூன் 10 அன்று காலமான நிலையில் எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி.

எனது கணவர் இறுதிச் சடங்கில் முழு அரசு மரியாதை வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்களுக்கும் ஆறுதலாய் நின்ற அனைத்து அமைச்சர் பெருமக்கள், தேவையான ஏற்பாடுகள் செய்த தேனி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் சென்னை மற்றும் தேனியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், இரங்கல் செய்தி வெளியிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள், செய்தி அறிந்து ஓடோடி வந்து துணை நின்ற திரையுலகினர், ரசிகப் பெருமக்கள், உறவுகள், நண்பர்கள் மற்றும் அவரின் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *