துரந்தர் ஸ்டைலில் பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு.. அச்சத்தில் இடத்தை மாற்றிய ஹபீஸ் சயீத், மசூத் அசார் | Hafiz Saeed and Masood Azhar moved to new safe house in pakistan after fearing unknown gunmens

Spread the love

International

oi-Mani Singh S

இஸ்லாமாபாத்: ஐநாவால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் உள்ள தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் சமீபகாலமாக அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்படுவது அதிகரித்து உள்ள நிலையில் இருவரும் பாதுகாப்பு நிறைந்த இடத்திற்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு எதிராக நாசவேலைகளை செய்ய சதித்திட்டம் தீட்டிவிட்டு பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வரும் நபர்களாக ஹபீஸ் சையது, மசூத் அசார் உள்ளனர். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இருவரும் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியலிலும் உள்ளனர்.

Hafiz Saeed and Masood Azhar moved to new safe house in pakistan after fearing unknown gunmens

பயந்துபோன பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

ஐநாவும் இருவரையும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதல், மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயத்தும், மசூத் அசாரும் பாகிஸ்தானில் சுதந்திரமாக உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் சமீப காலமாக நடைபெறும் மர்ம துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் கதி கலங்கிய இருவரும் பாதுகாப்பான இடங்களுக்கு தங்களின் இருப்பிடத்தை மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் உளவு பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு ஹபீஸ் சையத்தும், மசூத் அசாரும் இடம் பெயர்ந்துள்ளனர். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீத் ராவல் பிண்டியில் தங்கியிருந்த நிலையில் தற்போது லாகூரில் உள்ள ஜோஹர் டவுன் அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளாராம்.

பாதுகாப்பு நிறைந்த இடத்திற்கு மாற்றம்

பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அருகிலேயே இந்த வீடு உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார், சிந்து மாகாணத்தில் உள்ள நவாபாஷாஷா என்ற இடத்தில் உள்ள பாதுகாப்பான இல்லத்தில் தங்கியுள்ளார். இருவரது வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திடீரென இருவரும் இருப்பிடத்தை மாற்றியதற்கு பின்னால் அச்சமே காரணம் என்று கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்குதல் நடத்தி சின்னாபின்னமாக்கியது. இந்தியா மீண்டும் அத்தகைய ஒரு தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாலும், சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாலும் ஏற்பட்ட அச்ச சூழல் காரணமாக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்கு இருப்பிடத்தை மாற்றியதாக சொல்லப்படுகிறது.

“துரந்தர்” பட பாணியில்..

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான துரந்தர் என்ற பாலிவுட் படத்தில், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் ஹம்சா, அங்கு இருந்தபடி பயங்கரவாதிகளை காலி செய்வார். இந்த படத்தில் இடம் பெற்று இருக்கும் காட்சி அமைப்பை போல, பாகிஸ்தானில் சமீப காலமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அச்சப்பட்டு இடத்தை மாற்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹபீஸ் சயீத் லஷ்கர் தொய்பா பிரமுகர்கள் யாரையும் நேரில் சந்தித்து பேசாமல் ஆடியோ மேசேஜ்கள் வாயிலாக மட்டுமே பேசி வருகிறாராம். அவருக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்ட நிலையில், அவரது நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயங்காரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் லோக்பத் ஜெயிலில் ஹபீஸ் சயீத் அடைக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் இந்த கூற்று பொய்யானது என்றும் ஹபீஸ் சயீத் பாதுகாப்பான இல்லத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *