துல்கர் சல்மான் சம்பந்தப்பட்ட பூட்டான் கார் கடத்தல் வழக்கு: மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல் | Bhutan car smuggling case involving Dulquer Salmaan: Two more luxury cars seized.

Spread the love

சர்வதேச கார் கடத்தல் நெட்வொர்க்கை முறியடிப்பதற்காக சுங்கத்துறை “ஆபரேஷன் நும்கோர்’ (Operation Numkhor) என்ற புலனாய்வு நடவடிக்கையைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரப்படுத்தி உள்ளது.

சர்வதேச கும்பல், வரி செலுத்தாமல் பூட்டானில் இருந்து இந்தியாவுக்குக் கடத்திவந்துள்ளது. கடத்தல் கும்பலிடம் இருந்து சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்கியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்கள் குறித்த இந்த விரிவான விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்களான துல்கர் சல்மான், அமித் சக்காலக்கல் உள்ளிட்ட பலரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்தக் கடத்தல் நெட்வொர்க் மூலம் இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே சுமார் 38 சொகுசு வாகனங்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

இந்த நிலையில் பூட்டானில் இருந்து வரி ஏய்ப்பு செய்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூருவில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ‘டொயோட்டா லேண்ட் குரூஸர்’ (Toyota Land Cruiser) ரக ஆடம்பர கார்களை சுங்கத்துறை தடுப்புப் பிரிவு (Customs Preventive Unit) அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *