தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை; பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது | Thoothukudi: Youth killed over love affair; 3 people including woman’s father arrested

Spread the love

தொடர்ந்து, சிறிது நேரத்தில் கனகலெட்சுமியின் தந்தை குமார், அவரது சகோதரர் மாரிமுத்து, உறவினர் சங்கர நாராயணன் மற்றும் குமாரின் மகள் கனகலெட்சுமி, உறவினர் பெண் ஆகியோர் ஆட்டோவில் அங்கு வந்தனர். குமார், மாரிமுத்து, சங்கரநாராயணன்  உள்ளிட்ட 3 பேரும் சஞ்சயைத் தனியாக அழைத்துச் சென்று பேசியுள்ளனர்.

இதில், சிறிது நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார் உள்ளிட்ட 3 பேரும் சஞ்சயை கத்தியால் தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்வதற்காக ஓடியுள்ளார். இருப்பினும் அவரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தைப் பார்த்த சஞ்சயின் நண்பர்களும், பேருந்திற்காகப் காத்திருந்த சக பயணிகளும் அலறியடித்து ஓடினர். இதில், காயமடைந்த சஞ்சய் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்கு காவல் நிலையம்

மேற்கு காவல் நிலையம்

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சஞ்சய் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், குமார் உள்ளிட்டோர் சஞ்சயைத் தாக்கும் போது, எதிர்பாராதவிதமாக கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த மாரிமுத்துவைக் கைது செய்து, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குமார், சங்கரநாராயணன் ஆகியோரையும் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *