தூத்துக்குடி: “யார் பெரிய ஆள்?” – மதுபோதையில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் கொடூரக் கொலை | One killed in clash between two parties over alcohol in Thoothukudi

Spread the love

இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்னோவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூசை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சந்தனராஜ் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகளில் சிக்கிய ரெளடி சந்தனராஜை போலீஸார் தேடி வந்தனர். ஆனால், போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகவே இருந்துள்ளார். இந்த நிலையில்தான், இந்தக் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.

தாளமுத்துநகர் காவல் நிலையம்

தாளமுத்துநகர் காவல் நிலையம்

பல வழக்குகளில் தொடர்புடைய சந்தனராஜ்ஜைப் பிடிக்காமல் போலீஸார் சுணக்கம் காட்டியதே இக்கொலைக்குக் காரணம் என்கின்றனர் அப்பகுதியினர். தூத்துக்குடி தாளமுத்துநகர், மேட்டுப்பட்டி, மொட்டை கோபுரம் ஆகிய பகுதிகள்தான் போதைப் பொருட்களின் புகலிடமாகவும், இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குப் பீடி இலைகள் உள்ளிட்டவற்றை கடத்தும் கேந்திரமாகவும் விளங்குகிறது. ஆனால், இங்கு பெரும்பாலும் உள்ளூர் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவதே இல்லை என்கின்றனர் அப்பகுதியினர்.

கஞ்சா நடமாட்டமும், கஞ்சா புகைப்பவர்களும் இப்பகுதியில் அதிகம் சுற்றித் திரிவதால் பெண்கள், மாலை நேரத்திற்கு மேல் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *