“தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்காங்க, ஆனா.!”- ஸ்ரீ கௌரி ப்ரியா| Sri Gouri Priya says people think I’m Tamil

Spread the love

“லவ்வர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கௌரி ப்ரியா.

சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் ‘சென்னை லவ் ஸ்டோரி’ படம் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஸ்ரீ கௌரி ப்ரியா ‘Hindustan Times’ ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

ஸ்ரீ கௌரி ப்ரியா

ஸ்ரீ கௌரி ப்ரியா

அதில் பேசியிருக்கும் அவர், ” சின்ன வயசுல தெலுங்கு, தமிழ் படங்களுக்கு இடையில இருக்க வித்தியாசத்த புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு விவரம் இல்ல.

ஏன்னா இங்க நிறைய படங்கள் டப் ஆகிதான் வரும். எனக்கு பிடித்த படங்கள்ல நிறைய தமிழ் டப்பிங் படங்கள் தான் இருந்துச்சு.

தமிழ்ல இருந்து தெலுங்குக்கு டப் ஆன நிறைய பாடல்களை பாடுவேன். கொரோனா ஊரடங்கு சமயத்துலத்தான் படங்களை அந்தந்த மொழிகளிலேயே பார்க்க ஆரம்பிச்சேன்.

அதுதான் என்னை தமிழ் சினிமாவுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்துச்சு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *