ஐசரி கணேஷ், “எந்த விஷயங்களைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது எனத் தெளிவாகச் செய்யக்கூடிய ஆள் தனுஷ் சார்தான். அவருடைய வேலையை அவர் செய்துகொண்டிருக்கிறார்.
இருந்தாலும், நாம் அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலமாக நிறைய பேருக்குப் பட்டம் தந்துகொண்டிருக்கிறேன். தனுஷ் சாருக்கு யாரும் இதுவரைக்கும் எந்தப் பட்டமும் கொடுக்கவில்லை.
நாம் அனைவரும் இணைந்து அவருக்குப் பட்டம் கொடுத்தால், நன்றாக இருக்கும். அவர் வேண்டாம் எனச் சொல்கிறார். ஆனால், நாம் அவருக்குக் கொடுப்போம்” என்றவர், தனுஷிற்குக் “கலை அசுரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்ட காணொளியை ஒளிபரப்பிக் காண்பித்திருக்கிறார்.
மேலும், “நானும் என்னுடைய குழுவினரும், யார் யாருக்கு என்னென்ன தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்தத் தலைப்பு யாருக்கும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இந்தப் பட்டத்திற்கு மிகப் பொருத்தமானவர் தனுஷ்தான். நியூமராலஜி படிப் பார்த்தால், மொத்தமாக 1 என்ற எண் வந்தது. அவர் சினிமாவில் நம்பர் 1-ஆக வர வேண்டும் என்பதுதான் நம் அனைவருடைய ஆசை” எனத் தெரிவித்தார்.