‘தேங்க்யூ சி.எம் சார்’ – மறுக்கப்பட்ட சாமி கும்பிடும் உரிமை; கோயில் நுழைவு மேற்கொண்ட பட்டியலின மக்கள் – karur temple issue solved by TN government

Spread the love

இதுகுறித்து, கடம்பன்குறிச்சி ஊர் முக்கியஸ்தரான பொன் முத்துக்குமார் பேசும்போது,

“மூன்று தலைமுறைகளுக்கு மேலாக கோயிலுக்குள் உள்ளே சென்று அம்மனை வழிபாடு நடத்தும் உரிமை மறுக்கப்பட்டு, மாற்று சமூகத்தினர் தீண்டாமையை கடைப்பிடித்து வந்தனர். திருவிழாவின் போது கோயிலுக்கு வெளியே நின்று மாவிளக்கு பூஜை செய்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்து வந்தனர். அப்போது, நாங்கள் கூனி குறுகி போவோம். இம்முறை கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளதாக கிராம மக்கள், மற்றொரு தரப்பிடம் கூறிய போது, அதனை ஏற்க மறுத்தனர்.

இது தொடர்பாக, புதிதாக ஆட்சி அமைத்த தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியதன் அடிப்படையில், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், திறமையாக பிரச்னையை கையாண்டு எந்த ஒரு சாதி மோதல்களும் உருவாகாத வண்ணம் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இன்று கோயிலில் சென்று கருவறை அருகில் வழிபாடு நடத்தும் உரிமையை தமிழக அரசு நிர்வாகமும், கரூர் மாவட்ட காவல்துறையும் மீட்டு கொடுத்துள்ளது. எங்கள் கிராம மக்கள் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக நல்லிணக்கம் காக்கப்பட்டு இறைவழிபாடு என்பது சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவதற்கு சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவு இருந்தும், கோயிலை பூட்டி சீல் வைத்து இரு தரப்பினரும் வழிபாடு நடத்த முடியாத சூழ்நிலையே பல்வேறு கோயில் பிரச்னைகளில் இருந்து வந்துள்ளது. ஆனால், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், பிரச்னையை சிறப்பாக கையாண்டு தீண்டாமை ஒழிக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை பலத்து தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்ததை மீட்டு கொடுத்துள்ளது மிகுந்த வரவேற்கத்தக்க ஒன்று. இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் தொடர்ந்தால், பட்டியல் சமூக மக்கள் இந்த அரசை மெச்சுவார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *