தேசியக் கொடி அசைப்பு பேரணி: “என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள்; ஆனால்…” – அபிஜித் திப்கே உறுதி | National Flag-Waving Rally: “You may hang me, if you wish” – Abhijit Dipke’s firm stance

Spread the love

அதில் நீங்கள் (திப்கே) சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டு வருகிறீர்கள். இது சட்டவிரோதமான செயலாகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனைப் பார்த்தபிறகு அபிஜித் திப்கே போலீஸாரைப் பார்த்து, “நீங்கள் என்ன கேலி செய்கிறீர்களா? இதையா நோட்டீஸ் என்று அழைக்கிறீர்கள்? உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதுகிறீர்கள்”‘ என்று அஜிபித் திப்கே கேட்டார்.

மேலும் தேசியக் கொடி அசைப்பு பேரணி திட்டமிட்டபடி நடக்கும் என்றும், என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள் என்றும் அபிஜித் தெரிவித்தார்.

இதையடுத்து தேசியக் கொடியை அசைப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், ஆனால் அனுமதி பெறாமல் பேரணி நடத்துவதும் கூட்டத்தைக் கூட்டுவதும் கட்டுப்பாடுகளை மீறும் செயல் என்பதால், அவ்வாறு செய்தால் சட்டப்படி போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் திப்கேவிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேசியக் கொடி விதிமுறைக்கு இணங்க, தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியமும், அது தொடர்பான கட்டுப்பாடுகளும் அவருக்கு எடுத்துரைக்கப்பட்டன.

டெல்லி போலீஸார் ஜந்தர் மந்தருக்குச் செல்லும் வழி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய வணிக மையமான கன்னாட் பிளேஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *