தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா ஆகிய நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
தேர்தல் விடுமுறை காரணமாக இரண்டு நாள்கள் பணிக்கு யாரும் வராமல் தொழிற்சாலை மூடிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு நாள்களுக்குப் பிறகு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வந்த தினேஷும், சூர்யாவும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிப்பதற்காக மூலப்பொருட்கள் வைத்துள்ள அறையைத் திறந்து உள்ளனர்.