தேனி : மலை கிராமத்திற்கு முதல் முறையாக தொடங்கபட்ட பேருந்து சேவை; பள்ளி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி! | Theni: Bus service launched to hill village for first time; school students delighted

Spread the love

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது. கொட்டக்குடி, குரங்கணி, முதுவார்குடி, சென்டிரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளன.

போடியில் இருந்து குரங்கணி, செண்டிரல் ஸ்டேஷன், கொட்டக்குடி கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி அமைக்கபட்டுள்ளது. ஆனால் குரங்கணி வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

குரங்கணிக்கு 1 கி.மீ. தூரத்துக்கு முன்பாக கொட்டக்குடி சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள கொட்டக்குடிக்குச் செல்லும் சாலையில் பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது.

இதனால் இந்தக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஜீப் அல்லது நடந்துதான் செல்ல வேண்டும். மேலும்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடந்தும், ஆட்டோக்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் கொட்டக்குடி சாலை சந்திப்பு வரை வந்து அங்கிருந்து பஸ்களில் சென்று வருகின்றனர்.

தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து

தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து

கொட்டக்குடிக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் அங்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தங்கள் கிராமத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *