தேர்தலில் 'டெபாசிட் காலி'னு சொல்றாங்களே; அப்படியென்றால் என்ன?

Spread the love

லை’டெபாசிட்டே போயிடுச்சு’, ‘டெபாசிட் காலி’ போன்ற வார்த்தைகளை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அடிக்கடி கேட்டிருப்போம்.

ஆனால், அப்படி என்றால் என்ன என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா… அப்படி யோசித்திருந்தால் உங்களுக்கான பதில்.

வங்கியில் எப்படி குறிப்பிட்ட ஒரு தொகையை டெபாசிட் செய்து வைக்கிறோமோ… அதே போல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாகச் செலுத்த வேண்டும்.

தேர்தல்
தேர்தல்

யார் எவ்வளவு செலுத்த வேண்டும்?

அந்த வேட்பாளர் குறிப்பிட்ட தொகுதியில் பதிவாகியிருக்கும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால்தான், அந்த வேட்பாளருக்கு டெபாசிட் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

இல்லையென்றால், அந்த டெபாசிட் தேர்தல் ஆணையத்திற்கே சென்று சேர்ந்துவிடும்.

இப்படி தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் பெற முடியாமல் போகும் வேட்பாளர்களையே டெபாசிட் இழந்த வேட்பாளர்கள் என்று கூறுகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பொதுப்பிரிவினர் ரூ.10,000-மும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.5,000-மும் டெபாசிட் செலுத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பொதுப்பிரிவினர் ரூ.25,000-மும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.12,500-மும் டெபாசிட் செலுத்த வேண்டும்.

உதாரணம்

சென்னை ராயபுரம் தொகுதியின் ஸ்டார் வேட்பாளர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாக்குகளை வைத்து டெபாசிட் இழப்பு உதாரணத்தைப் பார்ப்போம்.

ராயபுரம் தொகுதியில் மொத்தம் 1,27,356 வாக்குகள் பதிவாகியுள்ளன.

1,27,236-ஐ 6-ஆல் வகுத்தால் வரும் எண் அளவிற்கு ஜெயகுமார் வாக்குகள் பெற்றிருந்தால், அவர் டெபாசிட் பணத்தைப் பெறுவார். அப்படி இல்லையென்றால், அவருக்கு டெபாசிட் பணம் கிடைக்காது.

1,27,236-ஐ 6-ஆல் வகுத்தால் 21,226 வாக்குகள் வருகிறது.

ஆனால், ஜெயகுமார் பெற்றிருக்கும் வாக்குகளோ 18,170.

21,226-க்கும் கீழ் எண்ணிக்கை வந்துள்ளதால், ஜெயகுமார் டெபாசிட் இழந்திருக்கிறார். அவருக்கு ரூ.10,000 மீண்டும் கிடைக்காது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *