5,000 ரூபாய் முதலீடு… 2 லட்சம் வருமானம்: டெரகோட்டா நகை பிசினஸில் சாதித்த ஒபு உஷா

Spread the love

“என் பெயரிலேயே ஃபேஸ்புக்கில் பிசினஸ் பக்கம் ஆரம்பிச்சேன்.  நான் செய்த நகைகளை மொபைலில் புகைப்படம் எடுத்து, விவரங்களுடன் அப்லோடு பண்ண ஆரம்பிச்சேன். ஆர்டர் வர ஆரம்பிச்சது. டெரகோட்டாவில் டெம்பிள்  ஜுவல்லரி டிசைனை அறிமுகம் செய்தேன். அந்தப் புது கான்செப்ட்டுக்கு நிறைய ஆர்டர் வந்தது. பட்டுப்புடவைக்கு மேட்சிங் நகைகள் ஏற்கெனவே இருந்துச்சு. புடவையின் டபுள் ஷேட்க்கு மேட்சாக டெரகோட்டா நகைகளை டிசைன் பண்ண ஆரம்பிச்சது தான் என்னோட பிசினஸ்ல பெரிய திருப்புமுனை. அந்த தனித்துவமான கான்செப்ட் தான் எனக்கு தனி அடையாளம் கொடுத்துச்சு. டிசைனர் ஆடைகளுக்கேற்ற நகைகள்,சிம்பிள் நகைகள் என வெரைட்டியான டிசைன்களை உருவாக்குனேன். நடிகை தேவையானி மேடம் உட்பட நிறைய செலிபிரெட்டிகள் என்கிட்ட டெரகோட்டா நகைகள் வாங்கியிருக்காங்க” என்றவரிடம் டெரகோட்டா நகைகள் உருவாக்கம் பற்றிக் கேட்டோம்.

 டெரகோட்டா

டெரகோட்டா

“சுத்தம் செய்யப்பட்ட களிமண்ணை வாங்கி, தண்ணீரில் பிசைந்து டிசைன் உருவாக்குகிறோம். அதை உலர்த்தி, வெப்பத்தில் உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களில் பெயின்ட் செய்து தயாரிப்பாக மாற்றுகிறோம். பிசினஸ் செய்வதைவிட வந்த கஸ்டமர்களை தக்கவைப்பதுதான் சவாலானது.  கஸ்டர்மர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வது, குறைகளை ஏத்துக்கிட்டு வேறு நகைகள் கொடுப்பது, புது டிசைன்களை அப்டேட் செய்வது, பேக்கிங் போன்றவற்றில் அதிக கவனமா இருக்கணும். இப்போ இன்ஸ்டா, வாட்ஸ் அப், வெப்சைட்னு பல வழிகளில் இருந்து ஆர்டர்கள் வருது. ஏழு பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்திருக்கேன். முதலீடு குறைவா இருந்தாலும்… முயற்சி பெரியதா இருந்தா போதும் சாதிக்கலாம் இதற்கு நான் ஒரு உதாரணம்,” என்று வெற்றிப் புன்னகையோடு விடைகொடுக்கிறார் ஓபு உஷா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *