‘அத்தை! எங்க சித்தி பையன் கதிர் அன்னிககு எங்க கூட வந்தப்ப நம்ம சரிதாவைப் பார்த்திருக்கான்.. அவனுக்கு சரிதாவை பிடிச்சிருக்கு .. சித்திக்கும் இதில ரொம்ப இஷ்டம். அதான் உங்க அபிப்பிராயத்தை கேட்டுட்டுப் போக வந்தோம்.’
‘அதில்ல மாப்பிள்ள சரிதா வந்து…. “பேச முடியாமல் திணறினாள் சுந்தரி.
‘ எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கோம்..சரிதாகிட்டயும் பேசிட்டு சொல்லுங்க. மறுபடி பேசி முடிவுக்கு வரலாம் .’ என்றார் இளங்கோவின் சித்தி..
‘அப்போ நாங்க கிளம்பறோம்.சீக்கிரமே ஒரு நல்ல முடிவை சொல்லுங்க. ‘எழுந்தனர் வந்தவர்கள்.
‘சுந்தரி அக்கா நான்சரிதாகிட்ட பேசிட்டேன். முழுசம்மதம் சொல்லிட்டா.நீ உங்க வீட்டுக்காரர் கூடப்பேசிட்டு இவங்களுக்கு பதில் சொல்லிடு சரியா ‘என்றபடி வந்தாள் ராணி.
வாசல் வரை சென்றுவிட்டு திரும்ப வந்த இளங்கோ ‘அப்புறம் அத்தை இந்த சீர்வரிசைப் பொருளை எல்லாம் அதான் அந்த தேர்தல் சீர் வரிசையைத்தான் சொல்றேன் திருப்பிக் கொடுத்திடுங்க . எங்களுக்கு வேண்டாம் , இல்லையில்லை நமக்கு வேண்டா.
பொண்ணுங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வச்சிருக்கீங்க வேலைக்கும் போறாங்க. குடும்ப சூழ்நிலை ,வெளி உலகம் ,நல்லது கெட்டது தெரிஞ்சவங்களா வளர்ந்திருக்காங்க
அது போதும் அத்தை! ‘
‘இல்ல மாப்பிள்ள! சவிதாவுக்கு தேவையானதை கொஞ்சமாவது கொடுத்தா தான் நல்லா இருக்கும்.அதுக்குத் தான் அக்காவும் தங்கச்சியும் உதவறேன்னு சொன்னாங்க. வேறொன்னுமில்லே ‘ என்றபடி சம்பந்தியைப் பார்த்தாள் சுந்தரி…
யாருகிட்டயும் கடனோ உதவியோ கேட்கவேண்டா… கல்யாணத்தை சிம்பிளா செய்யலாம்..கவர்மெண்டு கொடுக்கிற சலுகைகளை ஏத்துக்கலாம், கட்சிக்காரங்க கொடுப்பதை வாஙகக் கூடாது. எங்களுக்குஉங்க பொண்ணு மட்டும் போதும்.. மாப்பிள்ளையும் பொண்ணும் ரெண்டு குடும்பத்தையும்அனுசரிச்சுப்
போறவங்களா இருந்திட்டா அதுவே
நமக்கு கிடைக்கிற சீர்வரிசைதான்… அதனாலே மனசையும் உடம்பையும் அலட்டிக்காம தெம்பா இருங்க சம்பந்தி , ” என்றார் மாப்பிள்ளையின் அம்மா.
தலையசைத்து ஆமோதித்தார் அவரது தங்கச்சி. மாப்பிள்ளை இளங்கோ சிரித்தபடி சுந்தரியைப் பார்த்தார்.
என்னக்கா சந்தோக்ஷமா?! இப்ப எப்படி இருக்கு?என்றாள்ராணி.
‘இருநூத்து முப்பத்து நாலு தொகுதியிலும் ஒத்தையாளா நின்னு ஜெயிச்சது மாதிரி இருக்கு ராணி ,’ மகிழ்ச்சியுடன் சொன்னார் சுந்தரி..
‘ அப்படீன்னா வா , வந்து இன்னைக்கு எனக்கு போர்வெல்
பம்ப் பில் நாலுகுடம் தண்ணி அடிச்சுக்குடு சரியா,’என்றாள் ராணி.
அங்கே எல்லோரும் சேர்ந்து குலுங்கி சிரித்த சிரிப்பின் சத்தம் போர்வெல் பம்ப் வரை கேட்டது…. தேர்தல் சீர்வரிசை பொருட்களும் அந்த சத்தத்தில் செய்வதறியாது குலுங்கின.
-நீலவேணி தேவராஜன்,
கோயமுத்தூர்.