தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam

Spread the love

நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் குறைந்​த​பட்​சம் 35 தொகு​தி​களிலா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். இதற்காக தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டது. 

ஆனால் ப.சிதம்​பரத்தை கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்​டு​ வந்​து, வெறும் 28 இடங்​களுக்கு அகில இந்​திய தலை​மையை செல்வபெருந்தகை ஒப்​புக்​கொள்ள வைத்​தார். இதில் ராகுல் காந்​திக்​குத் தனிப்​பட்ட முறை​யில் பெரிய வருத்​தம் உண்​டு. தொடர்ந்து வேட்​பாளர் தேர்​விலும் தனது ஆதர​வாளர்​களுக்கே செல்​வப்​பெருந்​தகை முக்​கி​யத்​து​வம் கொடுத்​தது பெரும் சர்ச்​சை​யானது. 

அதுமட்டுமின்றி, பிரச்​சா​ரக் கூட்​டம் ஒன்​றில் ராகுல் காந்​தி​யின் பேச்​சைத் தவறாக மொழிபெயர்த்​தது என செல்​வப்​பெருந்​தகை மீது ராகுல்காந்தி கடும் கோபத்தில் உள்ளார். இதையெல்​லாம் கவனத்​தில் கொண்​டு​தான் புதிய தலை​வரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவுக்கு வந்​துள்ளது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு தலைவர் பதவியிலிருந்து கல்தா கொடுக்க தலைமை முடிவு செய்துவிட்டது. 

ஆனால், ஏற்​கெனவே மாநிலத் தலை​வர் பதவி​யில் இல்​லாத புதி​ய​வர்​களை நியமிக்​கவே ராகுல்காந்தி விரும்​பு​கிறார். இதனால் தலை​வர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, மாணிக்​கம் தாகூர், செல்​ல​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோர் டெல்லியில் காய் நகர்த்த தொடங்கியுள்ளனர்.  முன்​னாள் தலை​வர்​கள் திரு​நாவுக்​கரசர், கே.எஸ் அழகிரி, தங்​க​பாலு போன்​றவர்​களும் வாய்ப்பை எதிர்​பார்த்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *