மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.
முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள போங்கான் பகுதியில் பாஜக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங், ஆட்சியின் கீழ் சாதாரண அரசியல்வாதிகள் முதல் ரவுடிகள் வரை அனைவரும் தங்களையே அரசு நிர்வாகம் போல் கருதி செயல்படுகின்றனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான கொடுங்கோல் ஆட்சி, பெண்களைத் துன்புறுத்தும் ரவுடிகளுக்கே துணை நிற்கிறது. “இனி மேல் இதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்’ என, உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.