‘தேர்தல் வாக்குறுதிப்படி விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!’ – மீண்டும் போராட்டத்தை அறிவித்த விவசாய சங்கங்கள் – farmers protest announcement!

Spread the love

கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதி படி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் வருகிற நவம்பர் – 25 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக 50 – க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, ஆலோசனகைக்கு பின் விவசாய சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் பரப்புரையின் போது ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் கூட்டுறவு பயிர் கடன்களையும், 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக கூட்டுறவு பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்வேன் என வாக்குறுதி அளித்ததோடு, இது உத்தரவாதம் எனவும் தெரிவித்ததோடு, நிபந்தனைகள் எதுவும் இன்றி முழுமையாக செய்வேன் எனவும் தெரிவித்தார். அதன்பிறகு, விவசாயிகள் – பொதுமக்களின் ஆதரவோடு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், தமிழ்நாட்டில் விவசாயிகள் மொத்தமாக 20,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர் கடன்களை பெற்றிருந்த நிலையில், வெறும் 2,000 கோடி ரூபாய் மட்டும் முதல் கட்டமாக அறிவித்தது, விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது.

அதன் பின்பு விவசாயிகளும் – விவசாய சங்கங்களும் தொடர்ச்சியாக போராடியதால் ஒரு லட்சத்திற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 5,000 என்பதற்கு பதிலாக, 35,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் பின்பு, 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து கூட்டமைப்பை ஏற்படுத்தி, திருச்சி – சமயபுரத்தில் ஐந்து நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால், விவசாய சங்க தலைவர்களோடு தலைமை செயலகத்தில் 9 -க்கும் மேற்பட்ட அமைச்சர் பெருமக்களும், போராட்டக் களத்திற்கு வந்து மூன்று அமைச்சர் பெருமக்களும் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், 30 நாட்களாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *