குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் 2015 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் வெளியான படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
சிறந்த கருத்தைச் சொல்லும் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் போனால், தயாரிப்பாளர் நஷ்டமடைய கூடாது என்கிற நல்ல நோக்கத்தில் இந்த மானியத் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
திரைப்படம் எடுத்து பொருளாதார ரீதியில் பின்னடவை சந்தித்த சில தயாரிப்பாளர்களுக்கு அரசின் இந்த மானியப் பணம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.
ஆனால் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்தால் இந்த மானியத்தை வாங்கி விடலாம் என்கிற போக்குதான் கடந்த சில வருடங்களாக நிலவி வருவதாகச் சொல்கிறார்கள்.
தவிர ஏகப்பட்ட கோல்மால்கள் இந்த திரைப்பட மானியத்தின் பின்னாலும் ஒளிந்திருப்பதாகக் குமுறுகிறார்கள் திரைத் துறையினர்.