தேவாவை ஏன் பார்க்கல…விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா..! – Kumudam

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்பவர் இளையராஜா. பல இசைக் கலைஞர்களுடன் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் இவர், தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் மறைந்தபோது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இசையமைப்பாளர் தேவாவின் மறைவின்போது இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தாதது விவாதத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், இன்று காலமான தனது நெருங்கிய நண்பரும், நீண்ட காலமாகத் தன்னுடன் பணியாற்றியவருமான சதானந்தத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சதானந்தத்தின் மறைவு தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “என்னுடன் நீண்ட காலம் பணியாற்றிய, என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த சதானந்தம் இன்று காலமான செய்தி எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு என்னுடைய அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். அவர் இசைக் கலைஞர் சுதர்சனத்தின் மகன். நீண்ட காலமாக என்னுடன் பணியாற்றியவர். அவருடைய மறைவுக்கு என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது குறித்து பேசிய இளையராஜா “காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் என்னுடன் உயிருடன் வாழ்ந்தவர்கள்; என் உணர்வுடன் கலந்தவர்கள்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் இளையராஜா கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இளையராஜா தற்போது அளித்துள்ள இந்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது. அதேசமயம், தனது நெருங்கிய நண்பர் சதானந்தத்தின் மறைவுக்கு அவர் தெரிவித்துள்ள இரங்கலும் திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *