தொகுதி மறுவரையறை: தமிழ்நாட்டுக்கு அநீதி என தாகூர் குற்றச்சாட்டு|Why Manickam Tagore Is Calling Delimitation ‘Modi-Limitation’

Spread the love

– எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.

– கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.

– சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.

இன்று (ஆகஸ்ட் 9 – வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள ‘QUIT UNFAIR DELIMITATION MARCH’ பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்!

நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைப்பயணம்.

மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘Unfair Delimitation’ பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ் அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *