இன்னும் முடிவெடுக்காவிட்டால்…
1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த டிசம்பருக்குள் முடிவெடுக்கப்படாவிட்டால், புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கணக்கில் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், 1971 கணக்கெடுப்பின் அடிப்படையிலான இந்த நடைமுறை 2051 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் பல கட்சிகளின் ஆதரவும் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி நிலைப்பாடுகள் இருந்தாலும், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிடாமல் தடுக்கவும், ஒட்டுமொத்த மாநில நலனைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”