தொகுதி மறுவரையறை விவகாரம்… திமுக மீதான ‘யூ டர்ன்’ விமர்சனங்களும் விளக்கமும்!

Spread the love

எனவே, கடைசியாக 2002-ம் ஆண்டு தொகுதி மறுவரையறை நடந்தபோதும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. அதேசமயம் மாநிலங்களுக்குள் தொகுதி எல்லைகள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு மூன்றாவது முறையாக மத்திய அரசுப் பொறுப்பேற்ற பா.ஜ.க அரசு, 2025-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முடித்து, 2026-ம் ஆண்டு தொகுதி மறுவரையறையைக் கொண்டுவர முடிவெடுத்தது. ஆனால், புதிய மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், அது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் இயற்றி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது அன்றைய தி.மு.க அரசு.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவந்தபோது, தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கவே, மசோதா தோல்வியடைந்தது.

இந்த நிலையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காட்சிகள் மாறின. தேர்தலில் வென்று த.வெ.க ஆட்சி அரியணை ஏற, தோல்வியடைந்த தி.மு.க எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் செயல்பட்டுவந்த ‘மதச்சார்பற்ற கொள்கைக்கூட்டணி’க் கட்சிகளும் த.வெ.க-வுக்கு ஆதரவளிக்க, தமிழக அரசியலில் தனித்து நின்று அரசியல் செய்யவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது தி.மு.க.

இதைத் தொடர்ந்து, ‘மாநில அரசியலில் த.வெ.க-வை எதிர்கொள்ள மத்திய பா.ஜ.க-வுடன் இணக்கமான போக்கைத் தி.மு.க கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டதாக’ விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்திருப்பது, தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தொகுதி மறுவரையறையை எதிர்த்துவரும் கட்சிகளும், ஏற்கெனவே தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளும் ‘தி.மு.க தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும், பா.ஜ.க-வின் அரசியல் வியூகத்துக்கு துணைபோகிறது’ என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன.

‘தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்திருப்பது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைவிடப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வின் சதித் திட்டத்துக்கு தி.மு.க துணைபோவது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இந்த முடிவு தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்திய அளவிலும் அரசியல் ரீதியான பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என கவலை தெரிவித்துள்ளார் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *