மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது “தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு’ சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், தென் மாநிலங்களின் முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் விஜய் நேரில் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் சந்தித்து பேசினர்.
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக பங்கேற்றிருக்கிறார்.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.