தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம் | madras high Court grants time to file affidavit in Thoothukudi firing case

Spread the love

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பாக 20 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

“ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், “அறிக்கையின் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *