அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 14,000-க்கும் மேற்பட்ட கதீட்டர் அடிப்படையிலான இதய சிகிச்சைகளை செய்திருப்பது குழந்தைகளுக்கு சிக்கலான இதய சிகிச்சையில் இம்மருத்துவமனையின் சிறந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. 50 சிகிச்சை செயல்முறைகள் என்ற இந்த சாதனை, இந்த அணுகுமுறையில் இம்மருத்துவமனையின் அதிகரித்து வரும் நிபுணத்துவத்திற்கும், அனுபவத்திற்கும் சான்றாக இருக்கிறது. தற்போதைய மருத்துவ சான்றுகள் இதன் சாத்தியக்கூறு மற்றும் ஊக்கமளிக்கும் ஆரம்பகால சிகிச்சை விளைவுகளை நிரூபித்தாலும், வழக்கமாக அறுவைசிகிச்சை முறையில் செய்யப்படும் ஃபோன்டானுடன் ஒப்பிடுகையில் பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சையின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதைப் புரிந்துகொள்ள நீண்டகால அடிப்படையிலான ஒப்பீட்டு தரவுகள் தேவைப்படுகின்றன.
அப்போலோ மருத்துவமனைகளின் செயல் உத்திகளுக்கான இயக்குநர் திருமதி. சிந்தூரி ரெட்டி கூறுகையில், “ஒரு சிக்கலான நோய்க்கு எவ்வாறு சிகிச்சையளிக்கலாம் என நாங்கள் மறு சிந்தனை செய்யும்போது, சாத்தியமான சிகிச்சை வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறோம். தோல் வழியாக ஃபோன்டன் சிகிச்சைகளில் 50 என்ற இலக்கை எட்டியிருப்பது அதையே பிரதிபலிக்கிறது. இது தகுதியான குழந்தைகளுக்கு மற்றொரு திறந்தநிலை அறுவைசிகிச்சைக்கு மாற்றாக குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சையை வழங்குகிறது. மருத்துவ நிபுணத்துவத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து சிகிச்சையின் வரம்பெல்லையை விரிவுபடுத்துவதே எமது செயல்திட்டமாகும்” என்றார்.
இந்நிகழ்வில் அப்போலோவின் சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் களியமூர்த்தி, சென்னை அப்போலோ மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுசீலா நாராயணசாமி மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த அணுகுமுறை மருத்துவ அனுபவம் மற்றும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆரம்பக்கட்ட ஆய்வறிக்கை 2023-ல் “Progress in Pediatric Cardiology’ இதழிலும், நோயாளி தேர்வு குறித்த விரிவான அறிக்கை 2024-ல் ‘JACC: Case Reports’ இதழிலும், இதன் மேம்படுத்தப்பட்ட அறிக்கை 2025-லும் வெளியானது.
சிக்கலான பிறவி இதய நோயைக் கையாளுவதில் கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சை முறைகளின் வளர்ச்சியை இந்த சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதே நேரத்தில், கவனமான நோயாளி தேர்வு, பல்துறை நிபுணர்களின் கூட்டு முடிவு மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.
அப்போலோ மருத்துவமனைகள் குறித்து: இதன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, 1983-ல் சென்னையில் முதல் மருத்துவமனையை தொடங்கினார். 78 மருத்துவமனைகளில் 10,900 படுக்கைகள், 7200+ மருந்தகங்கள், 300 கிளினிக்குகள், 2,500 நோயறிதல் மையங்களுடன் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநராக அப்போலோ குழுமம் இப்போது வளர்ந்துள்ளது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டிகள், 2,00,000-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகளை இதுவரை செய்துள்ள அப்போலோ, மேம்பட்ட சிகிச்சையை வழங்க புதிய தொழில்நுட்பத்திலும், ஆராய்ச்சியிலும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.