நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு! – Kumudam

Spread the love

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று (ஜூன் 30) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்குப் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. கடந்த 22 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,08,800 என்று இருந்த விலை, அடுத்தடுத்த நாட்களில் சரிந்து 25 ஆம் தேதி அன்று ரூ.1,05,120 ஆகக் குறைந்தது. பின்னர், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மீண்டும் விலை உயரத் தொடங்கியது.

எனினும், இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்ததைத் தொடர்ந்து, இன்றும் தங்கத்தின் விலை மிகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,030 என்ற விலையை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து இன்று வெள்ளியின் விலையும் சற்றே சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.2,40,000 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *