வாரத்தின் முதல்நாளான இன்று (செப்.28) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.235 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,765-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையைக் போலவே வெள்ளி விலையிலும் வீழ்ச்சி தென்படுகிறது. சென்னையில் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களின் விலை மாற்றம்
முன்னதாக, செப்டம்பர் 25-ஆம் தேதி தங்கம் விலை சற்று உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,080-க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 26-ஆம் தேதி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனையானது.
வார விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே நிலைய நீடித்தது. அப்போது வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையான சூழலில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் அதிரடியாகக் குறைந்துள்ளது.

