நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…வார தொடக்கத்தில் சரிந்த தங்கம் விலை … – Kumudam

Spread the love

தங்கம் விலை கடந்த 7 ஆம் தேதி வரை குறைந்து வந்த நிலையில் 8 ஆம் தேதி முதல் 10 தேதி வரை தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. அதன்படி 10 ஆம் தேதி ஒரு கிராம் ரூ 13,350 க்கும் ஒரு சவரன் ரூ 1,06,800 க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் (11.07.2026) கிராமுக்கு ரூ 50ம்,சவரனுக்கு ரூ 400ம் குறைந்து ஒரு கிராம் ரூ 13,300 க்கும் ஒரு சவரன் ரூ 1,06,400 க்கும் விற்பனை ஆனது. நேற்று (12.07.2026)  ஒரு கிராம் ரூ 13,300 க்கும் ஒரு சவரன் ரூ 1,06,400 க்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை  ஏற்ற இறக்கத்தோடு விற்றுவரும் நிலையில் வாரத்தின் தொடக்கத்தில் விலை குறைந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 800 குறைந்து ரூ 1,05,600 க்கும்,  கிராமுக்கு ரூ 100 குறைந்து ரூ 13,200 க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 240க்கும் பார் வெள்ளி ரூ 2,40,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *