
வார தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்திருப்பது நகை வாங்குவோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு சந்தித்து வரும் நிலையில் இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலையில் ஏற்றத்தை மட்டுமே கண்டது. அதன்படி கடந்த திங்கள்கிழமை ஒரு கிராம் ரூ 13,150 க்கும் சவரன் ரூ 1,05,000 க்கும் விற்பனையானது.
செவ்வாய் கிழமையன்று கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ரூ 13,220 க்கும் ,சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ரூ 1,05,760க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (22.07.2026) சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,07,440க்கும், கிராமுக்கு ரூ 210 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,430க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (23.07.2026) சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 2160 குறைந்து ஒரு சவரன் ரூ 1,05,840 க்கும் கிராமுக்கு ரூ 270 குறைந்து ஒரு கிராம் ரூ 13,230 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தங்கம் விலை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ 5 குறைந்து ஒரு கிராம் ரூ 240க்கும் ஒரு கிலோ ரூ 2,40,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.