தங்கம் விலை கடந்த 5 ஆம் தேதியிலிருந்து ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில் அன்று மட்டுமே சவரனுக்கு ரூ 2,240 உயர்ந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் (06.08.2026) சவரனுக்கு ரூ 2,160 அதிகரித்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று (07.08.2026) நிலவரப்படி கிராமுக்கு ரூ 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,900 க்கும் , ஒரு சவரன் ரூ 1,11,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 4 வது நாளாக இன்று தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 1,11,720 க்கும் , கிராமுக்கு ரூ 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,985 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏறுமுகம் கண்டு வந்த தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று எந்தவொரு மாற்றம் இல்லாமல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ 250 க்கும், ஒரு கிலோ ரூ 2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

