நகை வாங்குவோருக்கு ஷாக்… மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…! – Kumudam

Spread the love

தங்கம் விலை கடந்த சில நாட்ளுக்கு முன் விலை குறைந்து வந்த நிலையில்  இந்த வார தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏற்றத்தை மட்டுமே சந்தித்த வந்தது. அதன் படி கடந்த திங்கள்கிழமை ஒரு கிராம் ரூ 13,150க்கும் , சவரன் ரூ 1,05,200க்கும் விற்பனையானது.

செவ்வாய்,புதன்,வியாழன், என மூன்று நாட்களுக்கும் அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்திருந்தது. அதன்படி நேற்று (24.07.2026) சவரனுக்கு ரூ 2,160 குறைந்து ஒரு சவரன் ரூ 1,05,840க்கும் கிராமுக்கு ரூ 270 குறைந்து ஒரு கிராம் ரூ 13,230க்கும் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,06,400க்கும் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றம் இல்லாமல் வெள்ளி ஒரு கிராம் ரூ 240க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *