நகை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்….தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? – Kumudam

Spread the love

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று(12.10.2026) வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை மட்டும் தங்கம் விலை காலை, மாலை என இரு வேளைகளிலும் குறைந்து, நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி, நேற்று (12.10.2026) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து, மாலையிலும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று மட்டும் ஒரே நாளில் தங்கம் விலை மொத்தமாக சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் குறைந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,685-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *