
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவருக்கு உடல் நலனில் பிரச்னை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும் பிரச்னை சரியாகவில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கார்த்திக்கின் உயிர் பிரிந்தது.
கார்த்திக்குக்கு ரம்யா என்ற மனைவியும் பிரிஷாணிதாரா, ஹைராணிதாரா என இரு மகள்களும் இருக்கிறார்கள்.
கார்த்திக்கின் உடலடக்கம் இன்று மாலை நடக்கிறது. கார்த்திக்கின் மறைவுக்கு தமிழ் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேவா மறைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இன்னொரு மரணம் தேவாவின் குடும்பத்தினர் மத்தியில் பெரிய சோகத்தை உருவாக்கியுள்ளது.