‘பின்னடைவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.!’- தேர்வர்களுக்கு ராதாகிருஷ்ணன் IAS வழங்கிய அறிவுரைகள்| Learn from Setbacks! – IAS Officer Radhakrishnan’s Advice to Exam Aspirants

Spread the love

இந்நிலையில் Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS-யை தொடர்புக்கொண்டு பேசினோம். அரசு தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், ” தேர்வர்கள் தேர்ந்தெடுத்த பணியில் சேர விரும்புவது ஏன் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்ச்சி பெறுவதைக் கடந்து, அப்பணியின் பொறுப்புகளையும் சமூகத்திற்குச் சேவையாற்றும் வாய்ப்பையும் உணர வேண்டும். சவாலான காலங்களில் இந்த நோக்கமே உங்கள் முயற்சியைத் தொடர உதவும். பாடத்திட்டத்தைக் கவனமாகப் படித்து, தேர்வு முறை, மதிப்பீட்டு முறை, ஒவ்வொரு கட்டத்தின் தேவைகள் ஆகியவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளுங்கள். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை ஆராய்ந்து, அவற்றை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யுங்கள்.

தேர்வு முறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கும் தயாராக இருங்கள். விருப்பப் பாடம் உள்ள தேர்வுகளில், உங்கள் ஆர்வம், புரிதல், தொடர்ந்து படிக்கக்கூடிய திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பாடத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பலம், கிடைக்கும் நேரம், மேம்படுத்த வேண்டிய பகுதிகள் ஆகியவற்றுக்கு ஏற்ப தயாரிப்புத் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *