நடிகை அனன்யா ராஜ் 35 வயதில் திடீர் மறைவு: என்ன நடந்தது? பின்னணி மற்றும் திரைப்பயணம் Actress Ananya Raj Passes Away at 35: Cause of Death, Career & News Details

Spread the love

2016-ம் ஆண்டு வெளியான 7 ஹவர்ஸ் டு கோ (7 Hours to Go) திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். 2017-ல் வெளியான தி ஃபைனல் எக்சிட் (The Final Exit) திரைப்படத்திலும், 2019-ல் புகழ்பெற்ற இயக்குநர் விக்ரம் பட் இயக்கிய கோஸ்ட் (Ghost) படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

இந்தி மட்டுமின்றி, தெலுங்கில் நவீன் சந்திரா நடித்த தக்கதேலே (Thaggede Le – 2022) திரைப்படத்தில் நடித்தார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் உருவான மதராஸி கேங் (Madrasi Gang) படத்திலும் முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.

டி-சீரிஸ், ஜீ மியூசிக், டைம்ஸ் மியூசிக் போன்ற முன்னணி நிறுவனங்களின் பல புகழ்பெற்ற சுயாதீன இசை வீடியோக்களிலும் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார்.

அனன்யா ராஜ்

அனன்யா ராஜ்

அனன்யாவின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல திரையுலக அமைப்புகளும், சக நடிகர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

வாழ்க்கையிலும் திரையிலும் சாதிக்க வேண்டிய ஒரு இளம் பெண், உடல் மற்றும் மனநலப் போராட்டங்களால் இவ்வளவு சீக்கிரம் மறைந்தது திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனப் பலரும் பதிவிட்டுவருகின்றனர்.

கனவுகளோடும் திறமையோடும் திரையுலகில் தன் வழியை அமைத்துக்கொண்ட அனன்யா ராஜ், இப்பூலவிகில் இல்லாமல் போனாலும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *